Sunday, September 9, 2012

மண்ணாங்கட்டி- தாண்டவம் முன்னோட்ட விமர்சனம் + இசை விமர்சனம்


எங்கடா தாண்டவம் விமர்சனம்னு காண்டாகி கடியாகி கமெண்ட் போட்டு மெசேஜ் போட்ட நண்பர்கள் மன்னிக்கவும்........
 

முன்னோட்ட விமர்சனம் (Trailer)
 
நம்ம டைரக்டர் விஜய்யோட அடுத்த (எந்த படத்த சுட்டாரோ) படைப்பு. இன்னும் எத்தன காலத்துக்குத்தான் கண்னு அவிஞ்சவனும் (விழிப்புலனற்றவர்களை கேலி செய்யவில்லை, அப்படி நடிப்பவர்களை மட்டுமே), ஞாபக மறதிகாரனும், அபூர்வ சகோதர குள்ளனும் பழிவாங்கிகிட்டு திரிய போறானுகளோ தெரியல.........
 
 
முன்னோட்ட (Trailer) பின்னணி இசையில் சிவதாண்டவம் பாடல் விறுவிறுப்பு. கண்தெரியாதவங்க சிலர் வௌவால் மாதிரியே எதிரொலிய வச்சே எதிரிலிருப்பதை கண்டுபிடிபாங்கனு நாசர் இலங்கைத்தமிழில் மொக்கை போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.
 
கண் தெரியாதவனின் பழிவாங்கலும், அனுஷ்காவும் மாதவனின் “ரெண்டு” படத்தை ஞாபகப்படுத்துகிறது. ( இந்த படத்திலயாவது அனுஷ்காவ உயிரோட வையுங்கப்பா) அனுஷ்கா, எமி ஜாக்சன் அழகோ அழகு....
லண்டனில் சண்டை காட்சிகள் குண்டு வெடிப்பு காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. விக்ரமின் நடிப்பிலும் விஜய்யின் இயக்கத்திலும் 100% நம்பிக்கை இருந்தாலும் முதல் காட்சிக்கு போவதற்கு பயமாக இருப்பது உண்மையே ( தாண்டவம் பார்க்க போனேன்.....1000 V பல்பு வாங்கி வந்தேன்னு பாட வச்சிடுவாங்களோ மாமா)
 
இசை விமர்சனம்

 
 நா.முத்துகுமாரின் எல்லா வரிகளும் அருமை..... ஜீ.வி.பிரகாஷ் எங்கிருந்து ஆட்டையை போட்டார்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ள மியூசிக்க மாத்திபுடுறாண்டா மாப்பிள்ளை.......
 
ஒரு பாதி கதவு  --> காதலன் காதலியை வர்ணிப்பதற்கு கதவை உவமையாக எடுத்திருப்பது புதுமை. எஸ்.ஏ.ராஜ்குமாரின் சாயல் சில இடங்களில் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. “இதயம் ஒன்றாகி போனதே, கதவே இல்லாமல் ஆனதே” வரிகளில் காதல் உணர்வு.

யாரடி மோகினி --> நல்ல பாட்டு. நம்ம ஹாரிஸ்சே சுட்டு தான் போடுவாரு (பிச்சை எடுத்ததாம் பெருமாளு, புடுங்கி திண்டதாம் அனுமாரு) அவர்ட இருந்து நம்ம ஜீ.வீ சுட்டிருகாறு. “நங்கை நிலாவின் தங்கை” ய “யாரடி மோகினி” னு கேக்குறாரு நம்ம ஜீ.வீ.

அனிச்சம் பூவழகி --> சந்திரமுகில ரெண்டு பாட்ட சுட்டு மிக்சில போட்டு அரைச்சு மியூசிக் பண்ணியிருக்காரு. “ஆ ஆ அண்ணனோட பாட்டு” பெண்குரல் தொடக்கத்தையும், “அத்திந்தோம்” பாடலையும் கலந்து கட்டி தந்திருக்காரு.
 
 அதிகாலை பூக்கள்  --> மனதை வருடும் சிறிய பாடல்.... ஜீ.வீ யின் குரலில் இளமை கொந்தளிக்கிறது.
உயிரின் உயிரே பம்பாய் தீம் மியூசிக்க அன்டணிட குடுத்து எடிட் பண்ணி பாட்ட தொடங்கிட்டார் போல. சைந்தவியின் குரலில் பாடல் மனதை வருடும் மெல்லிசை.
 
 Will you be there --> டெயிலர் ஸ்விப்ட்பிட (ஜாக்கட் தைக்குற ஆளில்லப்பா. இங்கிலிசு பாடகி) “Love Story” பாட்ட காப்பி பண்ணி ஹாரிஸ் ஜெயராஜ்ட “வாராயோ வாராயோ” தொடக்க Beatட கடன் வாங்கி (கொய்யால யார ஏமாத்துற) போட்டிருகாரு.
 
சிவ தாண்டவம் --> இந்த பாட்டு கேக்கிறதும் எங்க நைனா திட்டிறதும் ஒரே மாதிரி இருந்திச்சு. ஒண்ணுமே புரியல... ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம். ஜீ.வீ க்கு ஒரு சபாஷ்.
 
ஜீ.வீ யின் இருபத்தைந்தாவது படம். எந்த பாடலும் சகிக்க முடியவில்லை என்ற எல்லைக்குள் செல்லவில்லை. சிலபாடல்கள் இனிமை...மற்றையவை இளமை....

No comments:

Post a Comment