Friday, July 20, 2012

மண்ணாங்கட்டி - துப்பாக்கியின் கதை அம்பலம்





துப்பாக்கி” ஒவ்வொரு விஜய் ரசிகர்கனதும் தற்போதைய இதயத்துடிப்பு! படத்தை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை! படத்தினுடைய கதை பற்றி ஒரு வதந்தி கூட வராததால் (ஹிஹிஹி கிளப்ப போறோமில்ல) உங்களுக்காக பல கேப்பமாரித்தனங்கள் செய்து! சந்தோஷ்சிவனுடைய ஆஸிஸ்டனோட பிகரு மாதிரி கடலை போட்டு உருவிய கதை உங்களுக்காக! (படம் வந்த பிறகு திட்டி கமன்ட் போட மாட்டோம் என்று சத்தியம் செய்து விட்டு கீழே போங்க!)

“இன்றைய உலகம் கணணி தொழில்நுட்பத்தை மட்டும் பெரிதும் நம்பி இயங்கி கொண்டிருக்கிறது..................”என்னு தொடங்கும் டொக்குமண்டரி உடன் டைட்டில்! (“விஜய் போலிசுன்னு சொன்னாங்க! பொய் சொல்லாத மண்ணாங்கட்டி” அப்பிடி சொல்லப்படாது தொடர்ந்து வாசியுங்க).

எயாபோர்டில் பணையக் கைதியாக மத்திய அமைச்சர் ஒருவரை பிடித்து வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை பிடிக்க ஜெகதீஸ் (அதாம்பா நம்ம இளைய தளபதி)தலைமையிலான அதிரடிப்படை களமிறங்குகிறது! (சத்தியமா விஜயகாந்த் படம் இல்லைங்க) மூணு பேரின் உயிரை கொடுத்து அமைச்சரை காப்பற்ற அவரும் இதற்கு உடந்தை என்னு நம்ம தளபதிக்கு தெரியவர gunன எடுத்து டிஸ்யும் அமைச்சர போட இவர வேலைய விட்டு தூக்கிர்றாங்க!

போங்கடா உங்க வேலையும் நீங்களுமுன்னுட்டு ட்ரெயின் புடிச்சு மும்பைக்கு போய் சத்தியனோட தங்கி வேலதேடுராறு! தளபதி ஜாவாவில புலியாம்! அதனால ஐரீ கம்பனில வேலை கிடைக்குது! அங்க நம்ம ஹீரோயின் காஜல சந்திக்கிறாரு! ஏற்கனவே சென்னைல காஜல மாப்பிள்ள பக்க போனவருக்கு பதிலா யுனிபோம்ல தளபதி போய் பொம்பள ரவுடிய பற்றி விசாரிக்க அவங்க வீட்டுகாரங்க காஜல பற்றி சொல்லி கலகல காமிடி சீனாம்! 

மும்பையில் நம்ம தளபதிக்கும் காஜலுக்கும் லவ்வு பத்திகொள்ள சுமுகமா போகும் கதையில்! “ம்பப்ருதி” (இது விளங்கினா கமன்ட் போடுங்க!)! மும்பை பங்குச்சந்தையின் வலை தளத்தில் சில மாற்றங்கள் தானாக நடக்க குழம்பிப்போகும் அதிகாரிகள் தளபதியின் உதவியை நாட! அவரு ஒரு கம்பியுட்டர்ல இருந்த படியே ஹக் செய்ய முயலும் கம்பூட்டர வெடிக்க வைக்கிறாராம் !(இணையத் தளத்தில் தேடி பார்த்து இது சாத்தியமா என சொல்லுங்கள்!) 

இதன் பிறகு தளபதியை சைபர் கிரைம் தடுப்பு அதிகாரியா (???) மத்திய அரசு பதவி கொடுக்க! தளபதி இருக்கும் வரை இந்தியாவின் முக்கிய இணைய தளங்களை கைப்பற்ற முடியாது! என்பதால் தளபதியை கொல்ல பாம் வைக்க வழமை போல தளபதி எஸ்கேப் பாவம் காஜல் கண்ணு புட்டுக்குமாம்!
பிறகு என்ன வழமை போல எதிரிகளை தேடி பலிவாங்குறது தான் கதையாம்! கடைசி கிளைமாக்ஸ் ராணுவ ரகசியங்களை ஹக் செய்ய முயலும் கும்பலிடமிருந்து பாதுகாக்க வில்லனை காரில் துரத்திக் கொண்டே காஜலுக்கு கம்ப்யூட்டர் “கோட்ஸ்” சொல்ல அதை போன்ல கேட்டு கண் தெரியாத காஜல் எப்பிடி தடுக்கிறாங்க! அது தான் முடிவு! (கண்ண திறத்திட்டு டைப் பண்ணவே உயிர் போகுது இதுல .... சரி விடுங்கப்பா!)

இடையில் சைபர் கிரைம் உயர் அதிகாரியாக ஜெயராம் நல்லவரா ? கெட்டவரா? உண்மையில் விஜய் யார் ? வில்லன்களின் நோக்கம் என்ன ? விஜயால் சத்தியன் லோக்கல் ரவுடிகளிடம் சிக்கி சீரழிவது! என்று படம் முழுவதும் சுவாரசியதுக்கு பஞ்சம் இல்லையாம்! இன்னும் மூன்று பாடல்கள் படமாக்க வேண்டி இருப்பதால் படம் தீபாவளிக்கு தான் வருமாம் !
(இது அந்த பன்னாட பயல் சொன்ன கதை! டை ஹர்ட் -4 படம் தான் ஞாபகம் வருகுது படம் வந்த பிறகு இது உண்மையா பொய்யா என சொல்லுங்க !) 

விமர்சனங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்
தொடர்புகளுக்கு :http://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal 
நன்றி - கலைஞன் 



No comments:

Post a Comment